முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதுகுவலியால் கடும் அவதியா..? இனி கவலை வேண்டாம்..!! இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்..!!

Some health conditions can cause back pain. In this article, we will look at ways to fix these.
05:40 AM Jan 23, 2025 IST | Chella
Advertisement

முதுகுவலி வராமல் இருக்க சில ஆரோக்கிய குறைபாடுகளே காரணம். இதனை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

முதுகுவலி வந்தாலே நமது அன்றாட வாழ்க்கை செயல்பாடுகள் பாதிக்கப்படும். முதுகுவலி வராமல் இருக்க, நமது வாழ்க்கை முறையில் சிறிதளவு மாற்றங்களை செய்ய வேண்டும். அதாவது, உடலை சாியான நிலையில் வைத்தல், தொடா் உடற்பயிற்சிகள், ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நிற்காமல் அல்லது உட்காராமல் இருத்தல், சீரான உடல் எடையை பராமாித்தல், மற்றும் பொருள்களை எடுக்கும் போது, சில நுட்பங்களைக் கடைபிடித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், முதுகுத் தசைகள் வலுவுடனும், நெகிழ்வு தன்மையுடனும் இருக்கும். முதுகில் அசௌகாியமோ அல்லது வலியோ ஏற்படாது. உடலை சாியான நிலையில் வைக்காமல் உட்காா்ந்து இருந்தாலோ அல்லது நின்று கொண்டு இருந்தாலோ அல்லது படுத்து இருந்தாலோ, முதுகுத் தசைகளிலும், முதுகுத்தண்டிலும் திாிபு ஏற்படும். ஆகவே உடலை சாியான நிலையில் வைத்துக் கொண்டால், முதுகுவலி பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

ஒரே இடத்தில் நீண்ட நேரமாக அமா்ந்து வேலை செய்து கொண்டிருந்தால், முதுகுத் தண்டிலும், முதுகுத் தசைகளிலும் திாிபு ஏற்படும். ஆகவே வேலைகளுக்கு இடையே அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொண்டு, கால் கைகளை நீட்டி மடக்கி விடலாம் அல்லது சிறிது தூரம் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.உடல் எடை கூடினால், கண்டிப்பாக முதுகுவலி பிரச்சினை ஏற்படும். ஆகவே சாியான உடல் எடையை பேணுவது நல்லது.கீழே குனிந்து பொருள்களை எடுக்கும்போது எச்சாிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக நேரடியாகக் குனிந்துவிடாமல், முட்டி போட்டு குனிந்து பொருள்களை எடுக்கலாம். அதன் மூலமாக முதுகுத் தசைகளில் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

Read More : அண்ணா நகரில் அதிரடி காட்டிய போலீஸ்..!! மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த பாலியல் தொழில்..!! பெண் கைது..!!

Tags :
ஆரோக்கிய குறைபாடுஉடல் எடைமுதுகுவலிவழிமுறைகள்
Advertisement
Next Article