நீங்கள் UTI-யால்அவதிப்படுகிறீர்களா!…வராமல் தடுப்பது எப்படி!…
UTI(Urinary Tract Infection)என்பது சிறுநீர் பாதை தொற்று ஆகும். இந்த காலகட்டத்தில் சிறுகுழந்தைகள் முதல் ஆண்கள்,பெண்கள் என அனைவருமே இந்த தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனை வராமல் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் சிறுநீர் பாதை தொற்று அதிகமாக ஏற்படுவதற்கு காரணம் போதுமான அளவு தண்ணீர் நம் உடலில் இல்லாததால் தான். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் பாதையில் எரிச்சளுடன் வலியை உணர்தல் போன்று இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஒரு சில நேரங்களில் சிறுநீரக பாதை தொற்று சிறுநீரகங்களை செயலிழக்க வைத்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தடுக்கும் முறைகள்: உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். வெளியே வாங்கிய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பொது கழிவறைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சுத்தமான கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். சுத்தமான உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் கொழுப்பு நிறைந்த மீன்கள், பால்பொருட்கள், வைட்டமின் டி மாத்திரைகள் போதுமான அளவு சூரியஒளி நம் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவதின் மூலம் சிறுநீர் பாதை தொற்றை தடுக்கலாம்