முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்த போட்டித் தேர்வுக்கு தயாரா..? 2024-க்கான அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..!!

07:24 AM Dec 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

டிஎன்பிஎஸ்சி 2024ஆம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள துறை சார்ந்த தேர்வுகள் குறித்தும் குரூப்- I, II, IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்தும் விவரங்கள் அடங்கியிருக்கும். மேலும், ஆண்டின் எந்த மாதத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும், தோராயமான காலியிடங்கள், அதற்கான தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறும்.

ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. மேலும், டிஎன்பிஎஸ்சி அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் குரூப் 1 தேர்வு ஜூலையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
அரசு வேலைடிஎன்பிஎஸ்சிதேர்வர்கள்தேர்வாணையம்
Advertisement
Next Article