For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொங்கல் முடிஞ்சி ஊருக்கு கிளம்புறீங்களா..? அடுத்த 2 நாட்களுக்கு கனமழை அலர்ட்..!! இந்த 9 மாவட்டங்கள் தான் டார்கெட்..!!

Heavy rain is likely to occur at one or two places in Thanjavur, Thiruvarur, Nagapattinam, Mayiladuthurai, Pudukkottai and Ramanathapuram districts tomorrow.
10:33 AM Jan 17, 2025 IST | Chella
பொங்கல் முடிஞ்சி ஊருக்கு கிளம்புறீங்களா    அடுத்த 2 நாட்களுக்கு கனமழை அலர்ட்     இந்த 9 மாவட்டங்கள் தான் டார்கெட்
Advertisement

நாளையும், நாளை மறுநாளும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஜனவரி 18ஆம் தேதியான நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், ஜனவரி 19ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மிதமான மழை

அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Read More : ”நீதிமன்றம் உத்தரவிட்டும் கணவருடன் சேர்ந்து வாழவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடைக்குமா”..? சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

Tags :
Advertisement