குளித்து முடித்தவுடன் இயர் ப்ளக்ஸ் போடும் பழக்கம் உடையவரா நீங்கள்… இந்த ஆபத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.!
குளித்து முடித்தவுடன் காதுகளுக்கு இயர் ப்ளக்ஸ் பயன்படுத்தும் பழக்கம் அனேகமான மக்களிடம் இருக்கிறது. இவ்வாறு இயர் ப்ளக்ஸ் பயன்படுத்துவதால் காதுக்குள் இருக்கும் அழுக்கு வெளியேற்றப்படுவதோடு காதுகளில் நீர் தேங்கி அதனால் ஏற்படும் காது வலி போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இயர் ப்ளக்ஸ் பயன்படுத்துவது நம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.? அதனைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாக காணலாம்.
பொதுவாக காதில் இருக்கும் அழுக்குகளை எடுக்கத்தான் இயர் ப்ளக்ஸ் பயன்படுத்துகிறோம். ஆனால் சில நேரம் நம் காதுகளில் வெளிப்புறத்தில் இருக்கும் அழுக்குகள் இயர் பட்ஸ் மூலமாக காதுகளுக்குள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக காது அடைப்பு மற்றும் காது வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இயர் ப்ளக்ஸ் பயன்படுத்தி காதில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றுவதாக நினைத்துக் கொண்டு காதுகளுக்கு காயங்களையும் ஏற்படுத்தி விடுகிறோம்.
காதுகளில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற நாம் இயர் ப்ளக்ஸ் பயன்படுத்தும் போது அது நம் காதுகளில் இருக்கும் வேக்ஸையும் வெளியேற்றி விடுகிறது. இந்த வேக்ஸ் தான் நம் காதுகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. அவை வெளியேற்றப்படுவது காதுகளுக்கு மிகவும் ஆபத்தானதாகும். சிலர் இயர் ப்ளக்ஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக ஹேர் பின் மற்றும் குச்சி போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர். இது காதுகளில் ஜவ்வு மற்றும் இயர் ட்ரம் ஆகியவற்றை சேதப்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் காதின் கேட்கும் திறனும் பாதிக்கப்படலாம்.
சில நேரங்களில் இயர் ப்ளக்ஸ் பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்யும் போது நமக்கே தெரியாமல் அழுக்குகளையும் தாண்டி காதில் காயத்தை ஏற்படுத்துகிறோம். நம் சுவை மற்றும் நாக்குடன் தொடர்புடைய பல நரம்புகள் காதுகளில் உட்புறங்களில் இருக்கிறது. இந்த நரம்புகளில் காயம் ஏற்பட்டால் நாக்கு மரத்துப் போகவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது போன்ற செயல்களை தவிர்த்து கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.