'GOAT' படம் பார்க்க போறீங்களா..? அப்படினா நீங்க தான் ஆடு..!! உயிரை வாங்கிட்டாங்க..!! விஜய்யை வெச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்..!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் கோட். படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. படம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”படத்தின் ஹீரோ ஆண்டி டெரரிஸ்ட் ஸ்க்வாடா இருக்காரு. அவரால வில்லன் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கு பழிவாங்க ஹீரோவோட மகனைக் கடத்தி அவனை பெரிய ஆளா ஆக்கி ஹீரோக்கு எதிராகவே திருப்பி விடுறாரு வில்லன். இதுக்கு அப்புறம் என்ன நடக்குதுங்கறது தான் கதை. ஆனா விஷூவலா என்ன வந்துருக்கும்னு ஆர்வம் வரும்.
ஆனா நாம ஊகிக்கிறதை விட படம் கேவலமாகத் தான் வந்துருக்கு. ஒரு படம் எப்படியாப்பட்டதுன்னு பார்க்குறதுக்கு முழு படத்தைப் பார்க்கத் தேவையில்லை. முதல் சீனைப் பார்த்தாலே தெரிஞ்சிடும். இந்த படத்துல முதல் பைட் சீனைப் பார்த்தாலே இன்னும் 3 மணி நேரம் உட்கார்ந்துருக்கணுமான்னு பீதி வந்துடும். இந்தப் படத்தை எல்லாம் பார்க்கும்போது தான் துப்பாக்கி எவ்வளவு நல்ல படம்னு தெரியவருது. ஒரு படத்துல வில்லன் ரோல் நின்னா தான் படம் எடுபடும்.
வில்லன் இந்தப் படத்துல என்ன பண்றாருன்னு தெரியல. சும்மா சும்மா வந்து நின்னுக்கிட்டு இருக்காரு. அப்புறம் தான் தெரியுது. இன்னொரு வில்லன் வர்றாரு. அது இன்னும் மோசம். ரெண்டு விஜய்ல ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடுறாங்க. ஒருத்தர் அடிக்கிறாரு. இன்னொருத்தரு அடி வாங்குறாரு. இவரு அடிச்சிட்டாரேன்னு சந்தோஷப்படுறதா? இல்ல அவரு அடி வாங்கிட்டாரேன்னு கவலைப்படுதா? என ஆடியன்ஸே குழப்பிப் போராங்க. இப்படத்தின் ஒரிஜினல் வில்லன் யுவன் சங்கர் ராஜா தான்.
அவரு எந்தளவுக்கு கேவலமா பேக்ரவுண்டு மியூசிக்கைப் போட்டுருந்தா கிளைமாக்ஸ்ல கிரிக்கெட் கமெண்ட்ரியைத் தூக்கிப் போட்டுருப்பாரு. அது முழுக்க தோனியோட புகழைப் பார்த்துப் பேசிக்கிட்டு இருக்காங்க. எதாவது ஒண்ணைப் பண்ணி படத்தை ஒப்பேத்தி விட்டுரலாமான்னு தான் நினைக்கிறாங்க. கதை அதரப்பழசு. திரைக்கதை மோசமா இருக்கு. இதுல புதுசா ஒண்ணை சேர்க்கலைன்னா காரித்துப்புவாங்கன்னு டைரக்டர் யோசிச்சிருப்பாரு போல. அதனால இதுல டீஏஜிங் டெக்னாலஜியை கொண்டு வந்துருக்காரு.
இந்தப் படத்துல எதுக்கு ரெண்டு விஜய். டீஏஜிங் பண்ணனும்கற ஒரே காரணத்துக்காக வச்சிருக்காங்க. ஆள் மாறாட்டமும் கிடையாது. படத்துக்கு வந்த வினையே அதுதான். குட்டையைக் குழப்பி விட்டுருச்சு. படத்தை ரெண்டே கால் மணி நேரத்துல எடுத்துருக்கலாம். 3 மணி நேரம் எடுத்து உயிரை வாங்கிட்டாங்க. நீங்க போய் படம் பார்க்குறதா இருந்தா நீங்க தான் ஆடு” என்று விமர்சித்துள்ளார்.