திருப்பதி போறீங்களா?. நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பக்தர்கள்!
Tirupati landslide: திருப்பதியில் இடைவிடாது பெய்துவரும் மழையால் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் பக்தர்கள் கவனமுடன் செல்லவேண்டும் என்று அறுவுத்தப்படுகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி நகர்ந்த காரணத்தால் ஆந்திராவில் திருப்பதி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்ந்ததுள்ளது. இதனால் தொடர் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக திருப்பதி, சித்தூர், நெல்லூருக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் அதிகளவு மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை சில பகுதிகளில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர்பேட்டையில் அதிகளவு மழைப்பொழிவு பதிவானது. இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2வது மலைப்பாதை சாலையில் உள்ள விநாயகர் கோயில் அருகே நேற்று காலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து பெரிய பாறாங்கற்கள் சரிந்து சாலையில் விழுந்தன. அந்த சமயத்தில் எந்த வாகனங்களும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று பாறாங்கற்களை அகற்றினர்.
Readmore: பிரசவ தேதி நெருங்கிவிட்டதா?. முன்கூட்டியே மருத்துவமனைக்கு போய்விடுங்கள்!. சுகாதாரத்துறை அறிவிப்பு!