பரிகார பூஜை செய்ய கோயிலுக்கு போறீங்களா..? அப்படினா கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!
பரிகார பூஜை செய்வதற்கு பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்வது வழக்கம். அப்படிச் சென்று கோயிலுக்குள் நுழைவதற்கு முன் கை- கால்களைச் சுத்தம் செய்ய வேண்டும். சிலர் தலையில் நீர் தெளித்தப்படி செல்வார்கள். ஆனால், அப்படி செல்ல வேண்டாம். உள்ளே நுழையும் போது பிரகாரத்தில் இருக்கும் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி முதல் வணக்கத்தை சமர்பித்துவிட்டு, ஒரு சிதறு தேங்காயைப் போடுங்கள்.
பரிகார பூஜை செய்வதற்கு முன்பு பித்ருக்கள் வழிபாடு, குலதெய்வம், முழு முதற் கடவுள் பிள்ளையாரை வழிபட வேண்டும். அதன் பிறகு தான், பரிகார கடவுள் வழிபாடு செய்ய வேண்டும். பரிகாரத் தலங்களுக்குச் செல்லும் போது அதிகாலை பூஜை செய்ய வேண்டும். இதனால், முதல்நாள் இரவே அங்கு சென்றுவிடுவது நல்லது. எந்தப் பரிகாரங்கள் செய்வதாக இருந்தாலும் குடும்பத்துடன் செல்ல வேண்டும்.
பரிகாரங்கள் செய்யும் வீட்டுப்பெண்கள் மாதவிடாய் நாட்களில் செல்வதைத் தவிர்க்கலாம். குடும்பத்திலும் பரிகாரம் செய்வதற்கு 3 நாட்கள் முன்பிருந்தே அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது. மதுப்பழக்கம், உடலுறவு வைக்கக் கூடாது. பரிகாரம் செய்ய செல்வதற்கு முன்பு குலதெய்வத்தை வழிபாடு செய்துவிட்டு செல்வது நல்லது. பொருளாதார நெருக்கடி எப்போதும் எல்லோருக்கும் உண்டு. ஆனால், பரிகார பூஜைகளுக்கு செல்லும்போது பிறரிடம் கடன் வாங்கி செல்ல வேண்டாம்.
பரிகாரம் செய்ய செல்லும்போது பரிகாரத்துக்குரிய தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். மற்ற கோயில்கள் அருகிலேயே இருந்தாலும் கூட அங்கு செல்லக் கூடாது. பரிகாரங்கள் செய்வோர் பூஜை செய்வதற்கு முன்பு துக்க நிகழ்வுகளிலும், துக்க வீட்டிற்கும் சென்றிருக்கக் கூடாது. உறவுகளுக்குள் யாரேனும் தவறி இருந்தால், பரிகாரங்களை தள்ளிப் போடலாம்.
பரிகாரங்கள் செய்யும்போது அகல் விளக்குகளை ஏற்றி வையுங்கள். எலுமிச்சம் பழத்தை ஆலயங்களில் உள்ள சூலத்தில் ஏற்றி வையுங்கள். நைவேத்யத்துக்கு பழங்கள். இனிப்புகள், மலர்களை வாங்கிச் செல்லுங்கள். பரிகாரத்தின் போது செய்யப்படும் கோ பூஜை பரிகார பலனை அதிகரிக்கும். குறிப்பாக, பரிகாரத்தை அவசர அவசரமாக செய்யாமல் நிதானமாக செய்து மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுங்கள். நல்லதே நடக்கும்...
Read More : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! தமிழ்நாடு அரசில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!