மின் கட்டணம் செலுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை..!! மக்களே உஷாரா இருங்க..!!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதன் எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மீண்டும் போலி மின்சார மின் கட்டண SMS மூலம் (Fake EB bill payment online SMS alert), வாடிக்கையாளர்களை மோசடி செய்யும் ஸ்கேம் தொடர்ந்து வருகிறதென்று Tangedco எச்சரித்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, ''மின்சார கட்டணம் செலுத்தப்படாமல் இருக்கிறது. உங்கள் மின்சார இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும். உடனே கட்டணத்தை செலுத்த இந்த லிங்க் (link) ஐ கிளிக் செய்யவும்'' என்று உங்கள் மொபைல் எண்ணிற்கு ஏதேனும் எஸ்எம்எஸ் வந்தால், அவற்றை உடனே புறக்கணிக்கவும். மின் கட்டணம் தொடர்பான போலி SMS-கள் மீண்டும் உலா வருவத்தினால் கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த போலி எஸ்எம்எஸ் உடன் வரும் லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் மின் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்ற அறிவுரையுடன் இந்த போலி எஸ்எம்எஸ் (EB bill SMS scam) உலா வருகிறது. மெசேஜ்ஜில் இருக்கும் லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தும் பொதுமக்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்த போலி எஸ்எம்எஸ் மோசடியில் சிக்காமல் இருக்க, பொதுமக்கள் SMS உடன் வரும் லிங்க்கை கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். அதேபோல், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அவசர அழைப்பு எண்ணிற்கும் அழைப்பு கொடுக்காமல் இருப்பது மிகவும் பாதுகாப்பானது. Tangedco-வின் அதிகாப்பூர்வ இணையதளம் வழியாக கட்டணம் செலுத்துவது பாதுகாப்பானது. உங்கள் சந்தேகங்களுக்கு Tangedco-வின் இலவச அழைப்பு எண் ஆன 1930 எண்ணை அழைக்கலாம்.
Read More : விவசாயம் அழிந்து வருகிறது..!! காகித ஆலை வேண்டுமா..? உணவு வேண்டுமா..? நீதிபதிகள் சரமாரி கேள்வி..!!