சிறைக்கு செல்கிறாரா..? விடுதலையாகிறாரா..? பொன்முடி வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!
கடந்த 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் பொன்முடி. இவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிந்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து 2016 ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2017இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இதையடுத்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இதில், பொன்முடியின் சிறை தண்டனை உறுதி செய்யப்படுமா? அல்லது விடுவிக்கப்படுவாரா? என்பது தெரிந்துவிடும். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில், தற்போது பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது திமுகவில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்கது.