For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் குழந்தையை Play School-இல் சேர்க்கப் போறீங்களா..? கண்டிப்பா இந்த விஷயத்தை சொல்லிக் கொடுங்க..!!

01:40 PM May 13, 2024 IST | Chella
உங்கள் குழந்தையை play school இல் சேர்க்கப் போறீங்களா    கண்டிப்பா இந்த விஷயத்தை சொல்லிக் கொடுங்க
Advertisement

முன்பெல்லாம் "ப்ளே ஸ்கூல்" என்ற வார்த்தையை நாம் கேள்விப்படிருக்க மாட்டோம். அந்த காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்கிறார்கள் என்றால், அதன் தொடக்கம் எல்.கே.ஜி. ஆகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன், ப்ளே ஸ்கூலில் தான் முதலில் சேர்க்கின்றனர். காரணம் இங்கு குழந்தைகளுக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், நீங்களும் உங்கள் குழந்தையை ப்ளே ஸ்கூலில் சேர்க்கிறீர்கள் என்றால், அதற்கு முன் சில விஷயங்களை அவர்களுக்கு
சொல்லிக் கொடுக்க வேண்டும்.

Advertisement

பெற்றோரின் பெயர்கள்: குழந்தைகள் தனது பெயர் மற்றும் பெற்றோரின் பெயரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், குழந்தைகள் எங்காவது காணாமல் போனாலும், அவர்களின் பெயர் மற்றும் பெற்றோரின் பெயர்கள் தெரிந்தால், காவல்துறைக்கு மிகவும் எளிதாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த விஷயங்களை உங்கள் குழந்தைக்கு மிகச்சிறிய வயதில் இருந்தே கற்றுக்கொடுங்கள்.

மரியாதை சொல்லி கொடுங்கள்: பெரியவர்களை மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். அதுமட்டுமின்றி, நன்றி, சாரி போன்ற விஷயங்களையும் சொல்லிக் கொடுங்கள். உங்கள் குழந்தையை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பும் முன், இவற்றைக் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.

சுகாதாரம் தொடர்பான விஷயங்கள்: சுகாதாரம் என்ற வார்த்தைக்கு குழந்தைகளுக்கு அர்த்தம் கூட தெரியாது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களை ப்ளே ஸ்கூலில் சேர்க்கும் முன், கழிவறை இருக்கையில் எப்படி உட்கார வேண்டும். பாத்ரூம் போக வேண்டியிருந்தால், கண்டிப்பாக ஆசிரியருக்குத் தெரிவிக்க வேண்டும். எதையும் சாப்பிடும் முன் கைகளை கழுவுவது எவ்வளவு முக்கியம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

Read More : ’சவுக்கு சங்கருக்கு கோவை சிறையில் சமாதி’..!! ’கையை உடைத்தது இவர் தான்’..!! பகீர் தகவல்..!!

Advertisement