தீபாவளிக்கு ஸ்வீட் வாங்கப் போறீங்களா..? இந்த எச்சரிக்கையை கொஞ்சம் பாருங்க..!! உயிருக்கே ஆபத்து..!!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசும், இனிப்பு வகைகளும் தான். என்றைக்காவது ஒரு நாள் தானே இனிப்பு சாப்பிடுகிறோம் என்று டஜன் கணக்கில் ஸ்வீட்டுகளையும், பலகாரங்களையும் வாங்கி சாப்பிடுவது வழக்கம். அ
திலும் கண்ணை பறிக்கும் அளவிற்கு கலர் கலரான ஸ்வீட்டுகளை தான் நம்முடைய கைகள் முதலில் எடுக்கும். இப்படி இருக்கையில், கலர் கலரான ஸ்வீட்டுகள் குறித்து பயங்கரமான எச்சரிக்கையை தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்தார்.
அதாவது சாதாரணமாக நினைக்கும் இந்த இனிப்புகளால் உயிரே போகும் அளவுக்கு பாதிப்பு வரும் என்று கூறப்படுகிறது. இயற்கையான நிறமா? என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது. அவை அனைத்தும் செயற்கை முறையில் நிறமூட்டப்படும் இனிப்புகள் தான்.
இந்த நிறமூட்டிகள் தான் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் முக்கிய ஏஜெண்டுகள். ஒருவேளை மக்களுக்கு தாங்கள் வாங்கும் கடைகளில் உள்ள ஸ்வீட்டுகளில் அதிக நிறம் இருப்பதாகவோ அல்லது பழைய ஸ்வீட்டுகளை விற்றாலோ 94440 42322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்.
முடிந்தால் அந்த ஸ்வீட்டினுடைய போட்டோக்களையும் போட்டு விடலாம். ஸ்வீட் மட்டுமல்லாமல் ஹோட்டல் உணவுகள் தரமாக இல்லாமல் இருந்தாலும் கூட இந்த வாட்ஸ் அப் எண்ணில் புகார் கொடுக்கலாம்.