For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்க வீட்டுக்கு ஏசி வாங்கப்போறீங்களா..? அப்படினா கண்டிப்பா இதை மறந்துறாதீங்க..!!

Here are 6 important things you should know about buying any AC.
01:33 PM May 30, 2024 IST | Chella
உங்க வீட்டுக்கு ஏசி வாங்கப்போறீங்களா    அப்படினா கண்டிப்பா இதை மறந்துறாதீங்க
Advertisement

கொளுத்துற வெயிலுக்கு பேசாம ஒரு ஏசி வாங்கி வீட்டுல மாட்டிடலாமா என்கிற யோசனை தான், உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அப்படினா, கவலைய விடுங்க. எந்தவொரு ஏசியை வாங்கினாலும் அதைப்பற்றி கட்டாயம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

நீங்க முதல்ல ஏசி வாங்கும் போது அதோட ஸ்டா ரேட்டிங் தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் 3 ஸ்டார் ரேட்டிங்காவது இருக்க வேண்டும். ஏன் அப்படின்னா அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியோட ஆற்றல் திறன் அதிகமா இருக்கும். அதாவது, 3-ஸ்டார் ரேட்டிங் ஏசியை விட 5-ஸ்டார் ஏசியின் செயல்திறன் இன்னும் சிறப்பா இருக்கும். மேலும் அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசிகள் நீண்ட காலத்திற்கு உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை சேமிக்க உதவும். அடுத்ததாக காப்பர் கம்ப்ரஸர். புதிய ஏசி வாங்கும் போது, அதில் சரியான கம்ப்ரஸர் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நீங்கள் வாங்கும் புதிய ஏசியில் இன்வெர்ட்டர் டெக்னாலஜி இருக்கா இல்லையனு மறக்காம கேட்க வேண்டும். ஒரு ஏசியில் கட்டாயம் இருக்க வேண்டிய மிகவும் முக்கியமான அம்சங்களில் இன்வெர்ட்டர் டெக்னாலஜியும் ஒண்ணு. இன்வெர்ட்டர் டெக்னாலஜியானது முழு கம்ப்ரஸரையும் ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்கு பதிலாக, ஏசியின் கேப்பாசிட்டிய மேனுவல் ஆக அட்ஜெஸ்ட் செய்வதன் மூலம் அந்த ஏசியின் செயல்திறனை அதிகரிக்க உதவும்.

புதிய ஏசி வாங்கும் போது, அந்த ஏசியில் ஆர்​​-32 கேஸை பயன்படுத்தப்படுகிறதா என்பதை கேட்டு தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், ஆர்-32 கேஸ் ஆனது சுற்றுச்சூழலுக்கு உகந்ததா இருக்கிறதோட சுற்றுச்சூழலுக்கு குறைவான அளவிலேயே தீங்கு விளைவிக்கின்றன. பெரும்பாலான ஏசிகள் ஒரு ஆண்டுக்கான என்டையர் ப்ராடெக்ட் வாரண்டி உடன் வருகின்றன. இருப்பினும் சில பிராண்டுகள் ஏசிக்குள் இருக்கும் கம்ப்ரஸர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. உங்களுக்கு பிடித்த ஏசியை தேர்வு செய்தவுடன், அந்த ஏசியின் இன்ஸ்ட்டாலேஷன் கட்டணங்கள் பற்றி மறக்காமல் விசாரிக்க வேண்டும். அதாவது அந்த ஏசியின் இன்ஸ்ட்டாலேஷன் இலவசமாக செய்து தரப்படுமா? அல்லது அதற்கென தனி கட்டணங்கள் உள்ளதா? என்பதை முன்னரே விசாரித்து கொள்ள வேண்டும்.

Read More : பால் டீ குடித்தால் நல்லது தான்..!! ஆனால், இப்படி மட்டும் குடிக்காதீங்க..!! இவ்வளவு கெடுதல் இருக்கா..?

Tags :
Advertisement