வீட்டு மனை வாங்க போறீங்களா...? இனி கவலை வேண்டாம்...! தமிழக அரசு சூப்பர் செய்தி...!
தமிழகத்தில் பட்டாவில் பெயர் மாற்ற செய்ய அதிகமாக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் வீட்டு மனைக்கான பத்திரம் மாற்றுவோர் பட்டாவில் பெயர் மாற்றத்தை சேர்த்தே செய்து கொள்கிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள நிலத்தை அளக்கும் நபர்கள் போதிய தமிழகத்தில் இல்லாததால் இதன் பணியில் பின்னடைவு உள்ளதாக தெரிகிறது.
நில அளவையர் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, நிலங்களை அளவீடு செய்யும் பணியில் உரிமம் அடிப்படையில், வெளியாட்களை ஈடுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு, நில அளவை பணி குறித்த பயிற்சி அளித்து, உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, 1,231 பேருக்கு நில அளவை பணிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், தாலுகா அளவில் பணி புரிய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். உட்பிரிவு கோரி வரும் கோப்புகளில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்க இவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். முடிக்கப்படும் கோப்புகள் எண்ணிக்கை அடிப்படையில், இவர்களுக்கான தொகை வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல பட்டா மாறுதல் செய்ய "தமிழ்நிலம்" கைப்பேசி செயலி www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவைக்கு https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.