புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போறீங்களா..? மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை பாருங்க..!!
மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக மத்திய அரசு ரேஷன் கார்டு நிலை 2024ஐ வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்த்து விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசின் nfsa.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டு நிலையை மாநில வாரியாகவும் சரிபார்க்கலாம்.
ரேஷன் கார்டு ஏன் அவசியம்
ரேஷன் கார்டு என்பது நாட்டில் ஒரு குடிமகனிடம் இருக்கும் முக்கிய ஆவணமாகும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் உணவு தானியங்களை பெறலாம். மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு நலத்திட்டமாக இருந்தாலும் ரேஷன் கார்டு அடிப்படையிலேயே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதனால், இதுவரை ரேஷன் கார்டு வாங்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம். ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அரசின் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைப் மிக குறைந்த விலையில் பெறலாம்.
ரேஷன் கார்டு பெற தகுதிகள்
விண்ணப்பதாரர் இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பிபிஎல் அல்லது ஏபிஎல் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ரேஷன் கார்டு பெற ஆதார் அட்டை, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், மின் கட்டணம் பில், முகவரி ஆதாரம், பான் கார்டு தேவைப்படும்.
ரேஷன் கார்டு ஸ்டேட்டஸை தெரிந்து கொள்வது எப்படி..?
* ரேஷன் கார்டுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களும் இப்போது ரேஷன் கார்டு நிலையை ஆன்லைனில் சரிபார்க்க அதிகாரப்பூர்வ NFSA இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
* விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் புரொபைல் பக்கத்தை அடைந்தவுடன், விண்ணப்பதாரர் Citizen Cornerஇல் உள்ள ரேஷன் கார்டு நிலையை அறியும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
* விண்ணப்பதாரர் ரேஷன் கார்டு எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
* அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, ரேஷன் கார்டு விவரங்களைப் பெறு விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* உங்கள் மாநிலம், மாவட்டம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்த பிறகு உங்கள் ரேஷன் கார்டு நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Read More : தமிழ்நாட்டில் இன்று முதல் அதிரடியாக உயர்ந்தது பால், தயிர் விலை..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!