முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாட்டுக்கறி சாப்பிட்ட திமிருல ஆடுறியா..? இஸ்லாமிய பள்ளி மாணவியை அவமானப்படுத்திய ஆசிரியை..!!

08:23 AM Nov 22, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 7ஆம் வகுப்பில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். இவர், கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியை அபிநயா மீதும், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், வகுப்பு ஆசிரியை அபிநயா என்பவர் மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இதை தொடர்ந்து மாணவி பெற்றோருடன் வந்து ஆசிரியை அபிநயா குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைமை ஆசிரியரிடம் முறையிட்டது குறித்து ஆசிரியை அபிநயா மாணவியிடம் வகுப்பறையில் கேட்டதாகவும், அப்போது ’உனது பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர்?’ என்ற கேள்விக்கு, மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக மாணவி கூறியுள்ளர். அதற்கு "மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் ஆடுறியாடி" என்று அபிநயா சொன்னதாகவும், அதற்கு மாணவி எனது பெற்றோரை பற்றியும் தொழிலை பற்றியும் ஏன் பேசுகிறீர்கள்? என்று பதிலுக்கு பேசியதற்கு, ஆத்திரம் நடந்த அபிநயா மாணவியை கண்ணத்தில் அடித்ததாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பெற்றோருடன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரிடம் முறையிட்டபோது அவரும் மிரட்டுகின்றீர்களா? என்று கூறியதாகவும், மாட்டுக்கறி சாப்பிடுவியா? என்று சக மாணவிகள் மத்தியில் வைத்து கேட்டும், சூவை துடைக்க வைத்தும் துன்புறுத்தியதாகவும், தனது படிப்புக்கு இவர்களால் பாதிப்பு இருக்கும் என்ற அச்சமாக எழுந்துள்ளதாகவும் அந்த புகாரில் மாணவி கூறியுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
ஆசிரியைஇஸ்லாமிய மாணவிகோவை மாவட்டம்மாட்டுக்கறி
Advertisement
Next Article