எப்போதுமே சோர்வாக இருக்கீங்களா..? உணவுக்கு பிறகு இதை மட்டும் சாப்பிட்டு வந்தால் சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்..!!
சோர்வை போக்கி உடலில் வலிமை பெற உதவும் சில குறிப்புகளை இந்தப் பதிவில் அறிந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.
நீங்கள் எப்போதுமே சோர்வாக இருக்கிறீர்கள் எனில் உங்களின் சோர்வுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அந்த வகையில், வைட்டமின் குறைபாடு கூட ஒரு காரணமாக இருக்கலாம். இதுதவிர அதிக பணி சுமை, தூக்கமின்மை, குறைந்த அளவு உடல் செயல்பாடு அல்லது முறையற்ற உணவு ஆகியவை உங்களை சோர்வடையச் செய்யும். இதனால் நமது அன்றாட செயல்பாடுகளைச் செய்வது கடினமாக அமையும். மேலும், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் டி.என்.ஏ. உற்பத்திக்கு வைட்டமின் பி 12 அவசியம். அதேபோன்று, நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் இது அவசியம்.
அந்த வகையில் உங்கள் உடலுக்கு போதுமான வைட்டமின் பி 12 கிடைக்காத போது, நீங்கள் எப்போதும் களைப்பாகவும் மற்றும் சோர்வாக உணரலாம். மேலும் இந்த குறைபாடு நமது உடல் பலவீனமடைய வழிவகுக்கும். வைட்டமின் டி குறைபாடு இருந்தால் அது உங்கள் உடல் சோர்வுக்கு வழிவகுக்கும். வைட்டமின் சி நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து இரும்பு சத்தினை உறிஞ்சுவதற்கு முக்கியமானதாக உள்ளது. இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் மற்றும் அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியமாக அமைகிறது. உங்கள் உடலில் வைட்டமின் சி சக்தியினை அதிகரிக்க சிட்ரஸ் பழங்கள், கிவி பழம், அன்னாசி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி மற்றும் மாம்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
இதுதவிர, சோர்வை போக்கி உடல் வலிமை பெற நமது வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உடல் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் தெரிந்துகொள்ளலாம். தேவையான பொருட்கள்: கசகசா 2 டீஸ்பூன், வால்நட் -10, சாரா பருப்பு 2 டீஸ்பூன், முந்தரி 10, பிஸ்தா 10, பாதாம் 10, பால் ஒரு டம்ளர். செய்முறை: கசகசா, வால்நட், சாராபருப்பு, முந்தரி, பிஸ்தா பாதாம் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்பு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் பாலை ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியில் 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இரவு உறங்க செல்வதற்கு முன் இதனை பருகுங்கள். இதன்மூலம் உடல் நல்ல வலிமை பெறும் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும். இதேபோல், தேன் 100 மி.லி., பாதாம் 50 கிராம், நெய் 25 மி.லி., எடுத்துக்கொள்ளுங்கள். பாதாமை 1 மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்பு அதன் தோலினை நீக்கி மிக்சி ஜாரில் போட்டு நன்கு பசைபோல் அரை கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் சேர்த்து அதனுடன் அரைத்த பாதாம் பசை மற்றும் தேனை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். தினமும் 3 வேளை சாப்பிட்ட பிறகு இதனை சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல வலிமை பெறும்.
Read More : வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000..? உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!!