For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்?… ஆபத்தை தடுக்க இதெல்லாம் பாலோ பண்ணுங்க!

05:40 AM Dec 18, 2023 IST | 1newsnationuser3
கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா நீங்கள் … ஆபத்தை தடுக்க இதெல்லாம் பாலோ பண்ணுங்க
Advertisement

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகெங்கிலும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பல கோடி கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கொடிய நோயிலிருந்து அந்த சமயத்தில் குணமடைந்து வந்திருந்தாலும், அதன் தாக்கங்கள் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் உடல் நலன் மற்றும் மன நலன் ஆகிய இரண்டும் பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து தற்போது பார்க்கலாம்.

Advertisement

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து ஏறக்குறைய 3, 4 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தாலும், அதன் நீண்டகால பாதிப்பின் எதிரொலிகள் தற்போது தொடரவே செய்கின்றன. உடல் சோர்வு, மூச்சிரைப்பு, நெஞ்சு வலி, சிந்தனை தவறுதல், சுவை அல்லது மனம் அறிய இயலாமை போன்ற பாதிப்புகளை தற்போதும் எதிர்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டபோது அது நம் உடலில் மிக குறிப்பாக தாக்கியது சுவாச பாதையை தான். ஆகவே தனிநபர்கள் இப்போதும் கூட சுவாச பிரச்சனைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூச்சிரைப்பு அல்லது கடுமையான இருமல் போன்றவை உங்கள் நுரையீரலில் அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறி ஆகும்.

வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு இப்போதும் கூட இதய தசைகளில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே நெஞ்சுவலி, படபடப்பு, மிகுதியான சோர்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு மன அழுத்தம், மிகுதியான கவலை, கவனச் சிதறல், சிந்தனை தடுமாற்றம் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவையெல்லாம் கொரோனாவுக்கு பிந்தைய மனநல பாதிப்புகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு இருந்தால் மனநல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

உடல் ஆரோக்கியத்தை தக்க வைக்க எப்போதுமே உடற்பயிற்சிகள் அவசியம் தான் என்றாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் முக்கியத்துவம் இன்னும் கூடுதலாக இருக்கிறது. நடைபயிற்சி, ஜாக்கிங் போன்ற எளிமையான பயிற்சிகளை செய்தால் கூட போதுமானது. கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளில் இருந்து நம்மை மீட்டெடுக்க சீரான உணவு பழக்கம் அவசியமாகும். அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், மெல்லிய புரதம் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்துக் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடலுக்கும், மனதுக்கும் போதுமான ஓய்வு அவசியம். அமைதியான சூழலில், நிம்மதியாக உறங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் தினசரி குறைந்தப்பட்சம் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரையிலும் தூங்கலாம். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல கொரோனா வாய்ப்பின் காரணமாக சுவாச பாதை மிகுந்த பாதிப்பு அடைந்திருக்கலாம். ஆகவே மூச்சிரைப்பு அல்லது இருமல் போன்ற பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தினசரி காலையில் மூச்சுப் பயிற்சி செய்வது நல்ல பலன் தரும்.

Tags :
Advertisement