உங்களுக்கு இனிப்பு பிடிக்குமா..? அதிகமா சாப்பிடுவீங்களா..? இனி உஷாரா இருங்க..!! என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?
நமது அன்றாட உணவில் மற்ற சுவைகளை விட இனிப்பு அதிகம் உள்ளது. இதனால் இனிப்பு சுவையை நமது நாக்கு அதிகம் விரும்பும். ஆனால், அறுசுவைகளில் மிகவும் பாதிப்பானது இந்த இனிப்பு சுவை தான். அதுவும் சர்க்கரை போன்ற இனிப்புகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும்.
குறிப்பாக சர்க்கரை நோய், உடல் வீக்கம், புற்றுநோய், செரிமான கோளாறுகள், உடல் பருமன், வயதான தோற்றம், உறுப்புகள் மெதுவாக வேலை செய்தல் போன்ற முக்கிய பாதிப்புகள் சர்க்கரையினால் உண்டாகுகிறது. ஆகையால், இனிப்பு மீதான ஆர்வைத்தை எப்படி குறைப்பது என்பதை தற்போது பார்க்கலாம். பலர் இனிப்பின் மீதான ஆசை காரணமாகவே சாக்லேட், இனிப்பு பண்டங்களை அதிகமாக சாப்பிடுகின்றனர்.
இது எதிர்காலத்தில் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சில பழங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இனிப்பு மீதான மோகத்தை கட்டுப்படுத்த உதவும். குறிப்பாக, அவகடோ பழத்தில் இனிப்பு குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாகவும் உள்ளது.
மேலும், ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சர்க்கரை, மாவுச்சத்து கிடைக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் புளிப்பு சுவை அளித்து சர்க்கரையை கட்டுப்படுத்தும். ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி உள்ளிட்ட பழ வகைகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகின்றன. கிவி பழத்தில் குறைவான சர்க்கரையும் நிறைவான விட்டமின் கே, விட்டமின் சி-யும் உள்ளது.