வாடகை வீட்டில் வசிக்கும் நபர்களா நீங்கள்...? இனி கவலை வேண்டாம்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!
வீட்டின் உரிமையாளருடன் வாடகை சம்பந்தமாக ஏற்பட்ட உரிமையில் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் காவல் ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறி மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார்.
காவல் ஆய்வாளர் தனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் கட்டப்பஞ்சாயத்து செய்தார். வாடகைப்பாக்கியை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுமாறு என்னை மிரட்டினார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சுப்பிரமணியன் புகாரின் பேரில் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் என கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன், மனுதாரர் வாடகை பாக்கியைச் செலுத்திவிட்டு வீட்டை காலி செய்ய மனுதாரர் தயாராக இருக்கும் போது, மனுதாரருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில் காவல் ஆய்வாளர் தலையிட்டது தவறானது. உரிமையில் பிரச்சினையில் போலீசார் தலையிடக்கூடாது என நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்ட போதிலும், காவல் ஆய்வாளர் தலையிட்டுள்ளார். அவர் மீது மதுரை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.