முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மயோனைஸ் பிரியரா நீங்கள்.? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்.!

06:00 AM Nov 20, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

உலகமயமாக்கல் காரணமாக மேற்கத்திய உணவுகள் மற்றும் மத்திய கிழக்கு உணவுகள் நம் நாட்டின் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் பரவலாக கிடைக்க தொடங்கி இருக்கிறது. அவற்றின் மூலம் இந்தியாவில் அறிமுகமான ஒரு உணவுதான் மயோனஸ். இது சவர்மா அல்ஃபகம் மற்றும் மந்தி போன்றவற்றிற்கு சைடிஸ் ஆக பயன்படுத்தப்படும் ஒரு உணவாகும்.

Advertisement

இதனை பலரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குழந்தைகள் இந்த உணவை அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். இந்த உணவை அதிகம் சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு பல தீங்கு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முறையாக தயாரிக்கப்படாத மைனஸ் உடல்நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியது எனவும் எச்சரித்துள்ளனர்.

நாம் மயோனஸ் சாப்பிடும் முன்பே அது முறையாக தயாரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மயோனஸ் பச்சை முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் போது அதில் பாக்டீரியாக்கள் தொற்று இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இது தயாரிக்க பயன்படுத்தப்படும் முட்டைகள் பாஸ்ட்ரைஸ்ட் செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கின்றனர்.

மயோனைஸ் அறை வெப்ப நிலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் இது முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இவற்றை தயாரிப்பதற்கு தரமான எண்ணெய்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். மயோனைஸ் கலோரிகள் அதிகம் கொண்டிருப்பதால் இது சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் இதனால் இதய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

Tags :
health tipsmayonnaiseமயோனைஸ்
Advertisement
Next Article