பீர் குடிக்கும் நபரா நீங்கள்..? பாட்டில் ஏன் பச்சை மற்றும் பழுப்பு நிறத்துல இருக்குன்னு தெரியுமா..?
பீர் பாட்டில்களின் நிறம் பச்சை அல்லது பழுப்பு நிறமாக இருப்பது ஏன் தெரியுமா? இந்த நிற பாட்டில்களில் மட்டும் பீர் நிரப்பப்பட காரணம் என்ன? இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பண்டைய எகிப்தில் முதல் பீர் நிறுவனம் திறக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதன் வரலாறு மிகவும் பழமையானது. சுமேரிய நாகரிகத்தின் காலத்தில் இருந்தே பீர் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் பீர் பேக்கிங் வெளிப்படையான பாட்டில்களில் செய்யப்பட்டது.
அதன் பிறகு, வெள்ளை நிற பாட்டில்களில் நிரப்பப்பட்ட பீர், சூரியனில் இருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கும் கதிர்களால் கெட்டுப்போவது கண்டறியப்பட்டது. மேலும், துர்நாற்றம் வீசத் தொடங்கியதாகவும் குடிக்க தகுதியற்றதாக அந்த பீர் மாறியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தனர். அதன் ஒரு பகுதியாக, பீர் பாட்டில்கள் பழுப்பு (Brown) நிறத்தில் தயாரிக்கப்பட்டன. இந்த தந்திரம் வெற்றிகரமாக இருந்தது. அதன் பிறகு பாட்டில்களில் உள்ள பீர் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருந்தது. சூரியனின் கதிர்கள் பழுப்பு நிறத்தை பாதிக்கவில்லை. இதனால் பழுப்பு நிற பீர் பாட்டில்களை நிறுவனங்கள் அதிகமாக தயாரிக்க தொடங்கின.
ஆனால், 2ஆம் உலகப் போரின் போது பழுப்பு நிற பாட்டில்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. எனவே, பீர் தயாரிப்பாளர்கள் பழுப்பு நிற பாட்டில்களுக்கு பதிலாக, பீர் தரத்தை பாதுகாக்கவும், விற்பனையை அதிகரிக்கவும் வேறு நிறங்களை பயன்படுத்த முடிவு செய்தனர். பின்னர் பச்சை நிற பாட்டில்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். அன்று முதல் இன்று வரை பச்சை மற்றும் பழுப்பு நிற பாட்டில்களில் மட்டுமே பீர் நிரப்பப்பட்டு வருகிறது.
Read More : கனமழையால் விடுமுறை..!! மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்..!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!!