For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செம் சான்ஸ்...! 12-ம் வகுப்பு முடித்து வேலை இல்லாத நபரா நீங்கள்...? தமிழக அரசு வழங்கும் 50% மானியம்...!

Are you a 12th grader and unemployed?... 50% subsidy provided by the Tamil Nadu government
08:33 AM Jan 03, 2025 IST | Vignesh
செம் சான்ஸ்     12 ம் வகுப்பு முடித்து வேலை இல்லாத நபரா நீங்கள்     தமிழக அரசு வழங்கும் 50  மானியம்
Advertisement

இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு உன்னதமான இடத்தினை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும்.

Advertisement

தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் விவரங்களை பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் துணிநூல் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள், உற்பத்தி கூட கட்டிடங்கள் ) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும்.

Tags :
Advertisement