For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அந்த 3 வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் இவர்கள்தானா..? லீக்கான விவரம்..!! ஆட்டம் சூடுபிடிக்க போகுது..!

04:44 PM Nov 20, 2023 IST | 1newsnationuser6
அந்த 3 வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் இவர்கள்தானா    லீக்கான விவரம்     ஆட்டம் சூடுபிடிக்க போகுது
Advertisement

பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்து 3 வைல்ட் கார்ட் என்ட்ரிகள் உள்ளே வர உள்ளதாக பிக்பாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதன்படி, 14 போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் 3 கடுமையான போட்டி வைக்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இந்த போட்டியில் தோல்வி பெற்றால் உள்ளே வர இருக்கும் வைல்ட் கார்டுக்கு வழிவிட வேண்டும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ள அந்த 3 போட்டியாளர்கள் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது. அத்துடன், ஏற்கனவே KPY பாலா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதன்படி, பிக்பாஸ் சீசன் 7 இல் பங்குபெற்று வெளியேறியவர்கள் தான் மீண்டும் உள்ளே வர உள்ளதாக ஆண்டவர் அதிரடி தீர்ப்பொன்றை சொல்லி உள்ளார். இதை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் திணறிக் கொண்டுள்ளனர். நாம் பிக்பாஸ் தலைவர் வைக்கும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டுள்ளனர்.

அதேவேளை, இதற்கு முன்னர் எலிமினேட் ஆனவர்களில் இருந்து மூவரை தான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளார்களாம். இதில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதால், அவர் மீண்டும் வர வாய்ப்பில்லை. அதேபோல் பவா செல்லதுரையும் பாதியிலேயே வெளியேறியதால் அவரும் வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஐஷூவும் மீண்டும் வர வாய்ப்பில்லையாம்.

எஞ்சியுள்ள அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன், அன்ன பாரதி ஆகியோரில் மூவர் தான் இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வர உள்ளார்களாம். இதில் அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா ஆகியோர் உள்ளே வர அதிகளவில் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags :
Advertisement