For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம் போடுவதால் இவ்ளோ நன்மைகளா? ஆனால், இதை மட்டும் செய்யவே கூடாதாம்!

04:40 PM May 02, 2024 IST | Mari Thangam
மதியம் சாப்பிட்டதும் குட்டி தூக்கம் போடுவதால் இவ்ளோ நன்மைகளா  ஆனால்  இதை மட்டும் செய்யவே கூடாதாம்
Advertisement

நம்மில் பலர் மதிய வேளைகளில் தூங்கும் பழகத்தினை வைத்திருப்போம். ஆனால், இது நல்ல பழக்கம் அல்ல என பலர் நம்மிடம் கூறியிருப்பர். இது உண்மையில் நல்லதா கெட்டதா..? நிபுணர்கள் கூறுவது என்ன..? 

Advertisement

காலை என்னதான் விழிப்புடன் இருந்தாலும், மதியம் அல்லது இளவெயில் வேளையில் வேலைகளை முடித்து விட்டு அமரும் போது, நமக்கு தூக்கம் தொற்றிக்கொள்வது வழக்கமான ஒன்று. சிலர் அப்படியே சில மணி நேரம் கண் அயர்வர், ஒரு சிலர் உடல் எடை போட்டு விடுமோ? அல்லது சோம்பேறித்தனம் அதிகமாகி விடுமோ? போன்ற பயத்தினால் தூங்காமல் சமாளிப்பர். பகலில் பல மணி நேரம் தூங்கினால் இரவில் தூக்கம் வராமல் விழிப்புடன் இருப்போம். ஒரு சிலர் மதிய தூக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஒரு சிலர் மதிய தூக்கம் நல்லது என்கின்றனர்.

நிபுணர்களின் கூற்றுப்படி, மதிய உணவை 2 மணிக்கு முன்பே முடிக்க வேண்டும். மதியம் தூங்க வேண்டும் என்றால் 3 மணி அளவில் தூங்கி 4 மணி அளவில் எழுந்திருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் தாமதமாகச் சாப்பிடுவது, தாமதமாகப் படுப்பது, தாமதமாக எழுவது ஆகியவை இரவில் தூக்கத்தைப் பாதிக்கிறது. தாமதமாக படுக்கைக்குச் சென்றால், இரவில் தூங்க முடியாமல் போகலாம்.

மதியம் தூங்கி 4 மணிக்கு எழ வேண்டும். இந்த மதிய நேர தூக்கம் என்பது 15 முதல் 20 நிமிடங்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நல்ல விசயம். இதை விட அதிக நேரம் தூங்க வேண்டாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அதிக நேரம் தூங்கும் போது, ​​அன்று மீண்டும் எதையும் செய்ய மனம் வராது, இரவில் அதிக தூக்கம் வராது. மதியம் குட்டியாக ஒரு தூக்கம் போடுவது பலருக்கும் புத்துணர்ச்சியுடன் வேலைகளை செய்ய உதவும் என நிபுணர்கள் கூறுகினறனர்.

ஆனால் மதியம் படுக்கைக்குச் சென்றவுடன் நீங்கள் விரைவில் எழுந்தால், மீண்டும் தூங்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் உடலுக்கு எவ்வளவு ஓய்வு மற்றும் தூக்கம் தேவை என்பதை உடலே தீர்மானிக்கிறது. மீண்டும் படுத்தால் மந்தமாக இருக்கும். நீங்கள் தூங்கச் செல்ல உங்களை கட்டாயப்படுத்தினால், நீங்கள் தூங்காமல் நேரத்தை வீணடிக்கலாம். ஆழ்ந்த உறக்கத்தில் விழுவது தாமதமான விழிப்புக்கு வழிவகுக்கும். இரவில் தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு,செல்போன் டிஜிட்டல் திரையில் இருந்து விலகி இருப்பது ஆழ்ந்த தூக்கம் பெற உதவும் என்கின்றனர் நிபுணர்கள்.

Tags :
Advertisement