செந்தில் பாலாஜியின் உடம்பில் இவ்வளவு பிரச்சனைகளா..? அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!! இதுதான் முடிவா..?
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது உடல்நலக்குறைவால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 15ஆம் தேதி புழல் சிறையில் செந்தில் பாலாஜி மதிய உணவை உட்கொண்டார். அப்போது, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு கால் மரத்து போகும் பிரச்சனையும் இருந்து வந்தது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்களின் அறிவுரைபடி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இசிஜி பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் சீரற்ற நிலை இருந்ததால் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கால் மரத்து போவதால் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதையடுத்து, எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு மூளையில் உள்ள குழாயில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான் கால் மரத்து போகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே வேளையில் முதுகுத்தண்டுவடத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு இதயவியல், நெஞ்சகம், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்களால், மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இது தவிர கழுத்து பகுதி சவ்வில் பாதிப்பு இருந்ததால் நரம்பியல் துறை மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அத்துடன் அவருக்கு பித்தப்பை இருக்கும் கொழுப்பு கட்டியை கரைப்பது குறித்து நிபுணர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அவருடைய உடல்நல பிரச்சனைகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாமா அல்லது மருந்து மாத்திரை மூலமே குணப்படுத்திவிடலாமா என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில், பித்தப்பையில் உள்ள கற்களை நீக்க அறுவை சிகிச்சை செய்யும் முடிவில் மருத்துவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அவருடைய நீதிமன்றக் காவலும் இன்று முடிவடைகிறது. அவர் மருத்துவமனையில் இருந்தபடியே ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.