For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெல்ட் அணிவதால் இவ்வளவு பிரச்சனைகளா..? இனிமேல் ஜாக்கிரதையா இருங்க..!!

02:52 PM Apr 25, 2024 IST | Chella
பெல்ட் அணிவதால் இவ்வளவு பிரச்சனைகளா    இனிமேல் ஜாக்கிரதையா இருங்க
Advertisement

இன்றைய காலத்தில் காலத்திற்கு ஏற்ப இளைஞர்கள் தங்களை மாற்றி கொள்கிறார்கள். ஒரு காலத்தில் தேவைக்கு மட்டுமே பெல்ட் அணிவார்கள். ஆனால், இப்போது பெல்ட் அணிவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. இன்னும் சொல்ல போனால், ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் பெல்ட் அணிகின்றனர். சிலருக்கு மிகவும் இறுக்கமாக பெல்ட் அணியும் பழக்கமும் இருக்கும். ஆனால், இது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் தெரியுமா..? பெல்ட் மட்டுமல்ல, பேண்ட்டையும் இறுக்கமாக போட்டால் பல பிரச்சனைகள் வரும்.

Advertisement

இறுக்கமாக பெல்ட் அணிந்தால், நரம்பு பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலும், இறுக்கமாக பெல்ட் அணிவது இரத்த நாளங்களில் இரத்த விநியோகத்தை தடுத்து, வயிற்று தசைகள் வேலை செய்வதை நிறுத்துகிறது. அதுபோல, இறுக்கமாக பெல்ட் அணிந்தால், நெஞ்செரிச்சல் மற்றும் அமில பிரச்சனைகள் அதிகரிக்கும். உண்மையில், இறுக்கமான பெல்ட் அணிந்தால் வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி வயிற்றில் இருக்கும் அமிலம் தொண்டைக்குள் சென்று, அமிலத்தன்மை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இறுக்கமாக பெல்ட் அணிந்தால், இடுப்பு பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிப்படைந்து, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும், இறுக்கமாக பெல்ட் அணிந்தால், முதுகு எலும்புகளை பாதிக்கிறது. முதுகுவலி வர வாய்ப்பு அதிகம். மேலும், சிஸ்டிக் நரம்பு போன்ற பல நரம்புகள் உங்கள் இடுப்பைச் சுற்றிச் செல்வதால், கால்கள் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும், இறுக்கமாக பெல்ட் அணிந்தால், முதுகெலும்பு விறைப்பை ஏற்படுத்தும். இதனால் முழங்கால் மூட்டுக்கு அழுத்தம் ஏற்படும். இதனால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம்.

Read More : கட்சியை கலைத்தார் மன்சூர் அலிகான்..!! மீண்டும் தாய் கழகத்தில் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Advertisement