பச்சை மிளகாயை இப்படி செய்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
பொதுவாகவே பச்சை மிளகாய் அனைவரது வீட்டின் சமையலறையிலும் இருக்கும். உணவின் சுவையை அதிகரிக்கவோ அல்லது சாலட் செய்து சாப்பிடவோ இது உதவுகிறது. உணவுக்கு காரமான சுவையை சேர்க்கும் பச்சை மிளகாய், ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை பச்சை மிளகாயில் உள்ளது.
பச்சை மிளகாயை சாப்பிடுவது நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு நன்மையை தரும். ஆனால், அதை தண்ணீரில் ஊறவைத்து சில மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு அந்த தண்ணீரை குடித்தால், அது உங்கள் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா.? ஆம், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் நம் சமையலறையில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்ற இலைகள் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை தான்.
பச்சை மிளகாயை ஒரு வாரம் ஊறவைத்து அதன் தண்ணீரைக் குடித்தால் உங்களது உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். பச்சை மிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது பல வகையான தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஏராளமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பச்சை மிளகாய் நீர் தோல் மற்றும் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த நீர் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
பச்சை மிளகாய் தண்ணீர் தயாரிப்பது எப்படி..?
* இரவில் தூங்கும் முன் 3-4 பச்சை மிளகாயை நன்றாகக் கழுவவும்.
* பின் மிளகாயின் நடுவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* இந்த மிளகாயை குறைந்தது 1 கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
* இந்த தண்ணீரை தினமும் நீங்கள் காலையில் குடிக்க வேண்டும்.
* இதை குடிப்பதற்கு முன் சிறிது நேரம் நீங்கள் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது.
குறிப்பு - உங்களுக்கு மிளகாய் ஒவ்வாமை இருந்தால் அல்லது ஏதேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால், அதை உட்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்.
Read More : வீட்டு வாசலில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்தினால் என்ன நடவடிக்கை தெரியுமா..? ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!