முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

துளசியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா??

06:00 AM Jun 08, 2024 IST | Baskar
Advertisement

துளசி தேநீரில் சுவையை சேர்க்க பயன்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கென்று பல நன்மைகளை வழங்குகிறது.

Advertisement

துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. ஆகவே துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

1)துளசி இலைகளில் அடாப்டோஜன்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலில் உள்ள மனஅழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலத்தை தளர்த்த உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

2)துளசி குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது. இது அமில ரிஃப்ளக்ஸை சமப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான செரிமானம் இருப்பதை உறுதி செய்ய pH அளவை பராமரிக்க உதவுகிறது.

3)துளசியில் கணைய உயிரணுக்களின் செயல்பாட்டை ஆதரிக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இது இன்சுலினை மேலும் வெளியிடுகிறது. எனவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

4) துளசியில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை காணப்படுகிறது. இது மழைக்கால தொற்றுக்களான சலதோஷம், இருமல் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

5)துளசியில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்குகிறது. எனவே காலையில் எழுந்ததும் துளசி இலைகளை வாயில் போட்டு மென்று வாருங்கள். நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.

6) துளியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. இது வேறுபட்ட தொற்றுக்களை நீக்க பயன்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

7) வெறும் வயிற்றில் துளசியை உட்கொள்ளும்போது அது உங்கள் இரத்தத்திலிருந்து நச்சுகளை வெளியேற்றி நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. முகப்பரு மற்றும் சரும கறைகளின் தோற்றத்தை குறைக்கிறது, இது உங்களுக்கு குறைபாடற்ற சருமத்தை அளிக்கிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உங்க சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. சருமழகை மேம்படுத்துகிறது.

Read More: பிரபல நடிகருடன் கள்ள உறவு..!! ’கோடான கோடி’ பாடல் நடிகைக்கு ரெட் கார்ட்..!! வசமாக சிக்கியது எப்படி..?

Tags :
ஆரோக்கியம்துளசிதுளசி மருத்துவ பயன்மருத்துவம்
Advertisement
Next Article