முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆடி 18 அன்று பெண்கள் இந்த விஷயத்தை செய்தால் இவ்வளவு நன்மைகளா..? இந்த பொருளை வாங்க மறக்காதீங்க..!!

It is believed that changing the thali rope on the day of Adiper will increase the life of the husband.
05:20 AM Aug 02, 2024 IST | Chella
Advertisement

ஆடி மாதம் என்றாலோ அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் முழுவதும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அம்மன் அருள்வாள். குறிப்பாக, ஆடி 18ஆம் நாள் சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஆடி பெருக்கு அன்று எது வாங்கினாலும் அது பெருகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், இந்த 2024ஆம் ஆண்டு ஆடி 18 ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. இந்த நாளில் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

Advertisement

ஆடி 18 அன்று செய்ய வேண்டியவை :

* ஆடிப்பெருக்கு அன்று முதலில் மஞ்சளில் பிள்ளையார் செய்ய வேண்டும். ஏனென்றால், எந்த ஒரு நல்ல காரியத்தை செய்யும்போது மஞ்சளில் பிள்ளையார் செய்து அதை வழிபட்டால் செய்யும் காரியம் வெற்றி பெறும் என்பது ஐதீகம். பிறகு பிள்ளையாரை வணங்கி நெய்வேதியம் படைத்து வழிபடுங்கள்.

* அதுபோல ஆடிப்பெருக்கு நாளில் பெண்களுக்கு தாலி கயிறு மாற்றுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. எனவே, நீங்கள் தாலி சரடு அணிந்து இருந்தால் கூட அதில் சிறிது அளவு மஞ்சள் கயிறு கட்ட வேண்டும்.

* ஒருவேளை உங்களது தாலி சரடில் ஏற்கனவே கயிறு இருந்தால் அதை ஆடிப்பெருக்கு தினத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

* தாலி கயிற்றை மாற்ற உகந்த நேரம் காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை ஆகும். இந்த நேரம் தவிர மற்ற நேரங்களில் தாலி கயிறு மாற்றுவது உகந்ததல்ல என்று கருதப்படுகிறது.

* ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்றினால் கணவனின் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

* முக்கியமாக ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பொட்டு போன்ற பொருட்களை தாம்பூல தட்டில் வைத்து சுமார் 3 அல்லது 5 பேருக்கு கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குலம் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.

* ஆடிப்பெருக்கு அன்று அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் போன்ற பொருட்களை முன்கூட்டியே வாங்கி நிரப்பி வைத்து விடுங்கள்.

* குண்டு மஞ்சள் ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.

* ஆடிப்பெருக்கு அன்று எதை வாங்கினாலும் அது பன்மடகு பெருகும் என்பது ஐதீகம்.

* எனவே, உங்களால் முடிந்த அளவிற்கு பொருட்களை வாங்கி குவியுங்கள். பணவசதி உள்ளவர்கள் பொன்னும் பொருளும் வாங்குவார்கள். உங்களால் பொன்னும் பொருளும் வாங்க முடியாவிட்டால் அதற்கு இணையான பலன்களைத் தரும் குண்டு மஞ்சளை வாங்க மறக்காதீர்கள்.

Read More : SBI வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே..!!

Tags :
ஆடி 18ஆடிப்பெருக்கு
Advertisement
Next Article