முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களே பொதுத்தேர்வுக்கு தயாரா..? இனி விடுமுறையே கிடையாது..!! அமைச்சர் சொன்ன தகவல்..!!

07:05 AM Nov 15, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் நீட், கிளாட் போன்ற தேர்வுகள் பொதுத்தேர்வு தேதிகளோடு வராத வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 3 வகையான அட்டவணை தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், அரசு சார்பில் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், அந்த வகையில் நீட் தேர்வு பயிற்சிக்கு 46,216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29279 மாணவர்களும், 31,730 மாணவர்கள் இரண்டுக்கும் சேர்ந்து விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார். மழை முன்னெச்சரிக்கை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளதாகவும்” அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 225 மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. நீட் தேர்வு எழுத 46,216 பேரும், ஜே.இ.இ., தேர்வுக்கு 29,279 பேரும், இரு தேர்வுகளையும் எழுத 31,730 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் எனக்கூறப்பட்டுள்ளது.

Tags :
அமைச்சர் அன்பில் மகேஷ்சென்னைநீட் தேர்வுபள்ளிக்கல்வித்துறைபொதுத்தேர்வு அட்டவணைஜேஇஇ தேர்வு
Advertisement
Next Article