கவனம்..! MRP விலையை விட கூடுதலாக பொருட்கள் விற்பனையா...? உடனே இந்த எண்ணுக்கு புகார் செய்யுங்க...!
கடைகளில் MRP விலையை விட கூடுதலாக பொருட்கள் விற்பனை செய்தால் வாட்ஸ் அப் மூலம் எவ்வாறு புகார் அளிப்பது என்பதை பார்க்கலாம்.
கடைகளில் MRP-க்கு மேல் கட்டணம் வசூலிப்பது வர்த்தகர் மீது வழக்குத் தொடரக்கூடிய குற்றமாகும் இருப்பினும், பல கடைகள், குறிப்பாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள கடைகளில், தண்ணீர் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் மற்றும் சில பேக் செய்யப்பட்ட பொருட்களை MRP ஐ விட அதிகமாக விற்பனை செய்கின்றன. அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த புகார்களை நுகர்வோர் சட்ட அளவியல் துறையிடம் பதிவு செய்யலாம்.
நீங்கள் பொருட்கள் வாங்கும் பொழுது MRP விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்றால் நீங்கள் முதலில் 1800-11-4000 இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்து புகாரை தெரிவிக்கலாம். மேலும் நுகர்வோர் 8800001915 என்ற எண்ணிற்கும் மெசேஜ் செய்தும் புகாரை தெரிவிக்கலாம்.
இது மட்டுமல்லாமல் எங்கு MRP விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது அந்த கடை பில் மற்றும் பொருள் முதலியவற்றை புகைப்படம் எடுத்து 9444042322 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பியும் புகாரை தெரிவிக்கலாம். இதனோடு கடைக்காரர் MRP-யை விட அதிகமாக வசூலித்தால், https://consumerhelpline.gov.in/user/signup.php என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலும் புகாரை தெரிவிக்கலாம்.