2000 ஆண்டு பழமை.. மழைக்காடுகளுக்கு உள்ளே புதைந்து கிடந்த 'மாயன் நகரம்' - எங்கு இருக்கு தெரியுமா?
பழமையான பாரம்பரியமிக்க மாயன் நகரம் ஒன்றை, அமெரிக்காவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவை பொருத்தவரையில் பழமையான கட்டிட கலைக்கு பெயர் பெற்றது. இங்கு 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடங்களும், குகைகளும், கட்டிடங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டுதான் இருக்கிறது. கீழடியில் கூட தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் பல நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. அதைக்கொண்டு, தமிழர்களின் வாழிவியல் முறைகளும், கலாச்சார பண்பாடுகளையும் தொல்லியல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
சமீபத்தில், மழைக்காடுகளுக்குள் ஊடுருவும் ஒளியைக்கொண்டு, அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில், மழைக்காடுகளால் மறைக்கப்பட்ட 2,000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமான, இடிபாடுகளுக்கிடையில் புதைக்கப்பட்டிருந்த மாயன் நகரம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது மெக்சிகோ எல்லைக்கு மிக அருகில் 650 சதுர மைல் பரப்பளவைக் கொண்டதாக இருந்திருக்கிறது. இந்தப் பகுதியை 110 மைல் நீளம் கொண்ட தரைபாலம் இணைக்கிறது. கிட்டத்தட்ட 1000 குடியிருப்பு வாசிகள் இதில் வாழ்ந்திருக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். இந்நகரத்தில் மக்கள் சில குடியிருப்புகளில் பெரிய தளங்கள், பிரமிடுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். அவற்றில் வேலைகளுக்கென்றும், விளையாட்டுகளுக்கென்றும், பொழுதுபோக்குகளுக்கென்றும், தனிதனி இடங்களாக அமைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை அளிப்பதாக கூறுகிறார்கள்.
மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன்படுத்தாமலேயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாசார சின்னங்களாகக் காணலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.
மாயன்களின் கணிப்புப்படி 2012ஆம் ஆண்டிற்கு பிறகு உலகம் அழியக்கூடும் என்கிற தகவல் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்களால் பரப்பப்பட்டு இறுதியில் பொய்யென நிரூபணமாகியது. மீண்டும், மாயன் காலண்டருக்கும், தற்போதைய பயன்பாட்டில் இருக்கும் காலண்டருக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதால் 2020இல் உலகம் அழியக்கூடும் என்கிற வதந்தியும் பரவியது குறிப்பிடத்தக்கது.
Read more ; மருத்துவ காப்பீடு திட்டத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!!