ED | திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.!! 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு.!!
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது ரத்து செய்யப்பட்ட மக்களால் கொள்கையை உருவாக்குவது தொடர்பான சதியில் ஒரு சில நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றம் சிறை தண்டனையை நீட்டித்ததை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் உள்ள அறை எண் 2-ல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். தனிமை சரியான அது 24 மணி நேரம் சிசிடிவி கண்காணிப்பு வசதியும் கொண்டிருக்கிறது. தனியாக அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலை 24 மணி நேரமும் காவலர்கள் கண்காணிக்க இயலும். இதற்கு முன்பு இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஐந்தாம் நம்பர் சிறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
அமலாக்க இயக்குனரகத்தின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார் . இதனை அடுத்து சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா கலால் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறை இயக்குனரகம் கெஜ்ரிவால் ஒத்துழைக்கவில்லை என்று கூறி மேலும் 15 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கூறியது. இதனை நீதிபதி மறுத்துவிட்டார். இன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடி நாட்டிற்கு எது செய்தாலும் அதில் தீமை தான் இருக்கிறது என தெரிவித்தார்.
ஆம் ஆத்மி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை மத்திய புலனாய்வு அமைப்பு மார்ச் 21ம் தேதி கைது செய்தது. அடுத்த நாள், சிறப்பு நீதிபதி பவேஜா அவரை மார்ச் 28 வரை ED காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவரது காவலில் உள்ள விசாரணையை 4 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய ED மனுவை நீதிமன்றம் அனுமதித்தது.