For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஷாக்..!! சென்னை சாலையில் இத்தனை பிரச்னைகள் இருக்கா? வெளியான ரிப்போர்ட்!! அதிகாரிகள் என்ன சொல்லுறாங்க?

07:45 PM Aug 09, 2024 IST | Mari Thangam
ஷாக்     சென்னை சாலையில் இத்தனை பிரச்னைகள் இருக்கா  வெளியான ரிப்போர்ட்   அதிகாரிகள் என்ன சொல்லுறாங்க
Advertisement

சென்னையில் உள்ள சாலைகள் குறித்து அறப்போர் இயக்கம் முக்கிய ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதாவது தலைநகர் சென்னையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற ஸ்பீட் பிரேக்கர்கள் மற்றும் பள்ளங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை முழுக்க 467 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டன. சுமார் 1000 தன்னார்வலர்கள் நடத்திய இந்த ஆய்வில் ஐயப்பந்தாங்கல், அகரம்தென் மற்றும் திருநீர்மலை உள்ளிட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்படப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஸ்பீட் பிரேக்கர்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

சர்வே நடத்தப்பட்ட இடங்களைத் தாண்டியும் பல்வேறு இடங்களில் இதே பிரச்சினை தான் என்று சென்னைவாசிகள் கூறுகின்றனர். இது தவிரச் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 205 இடங்களில் பாதாளச் சாக்கடைக்கான பள்ளங்கள் சாலை மட்டத்திற்கு இணையாக இல்லை. இது IRC 98-2011 விதிமுறைகளுக்கு எதிராக இருக்கிறது. இதனால் சாலைகளில் செல்வோருக்குக் குறிப்பாக டூவீலரில் செல்வோருக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் டி.கார்த்திகேயன் இந்த விவகாரத்தில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த சென்னை மேயர் பிரியா கூறுகையில், சென்னையில் இப்போது மெட்ரோ பணிகள், மெட்ரோ வாட்டர் பணிகள் என பல்வேறு பணிகள் நடந்து வருவதாலேயே சாலைகளும் பாதாளச் சாக்கடை மூடிகளும் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இதைச் சரி செய்ய உடிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Read more ; இரவில் ப்ரா அணியலாமா? போருக்கு மத்தியில் இஸ்ரேலிய பெண்களுக்கு எழுந்த கவலை..!!

Tags :
Advertisement