For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'இங்க இருந்த கடலை காணோங்க'.! 50 ஆண்டுகளில் மாயமான கடல்.! காரணம் தெரியுமா.?

04:02 PM Feb 09, 2024 IST | 1newsnationuser4
 இங்க இருந்த கடலை காணோங்க    50 ஆண்டுகளில் மாயமான கடல்   காரணம் தெரியுமா
Advertisement

உலகின் நான்காவது பெரிய உள்நாட்டு கடலாக கருதப்பட்ட ஆரல் கடல், 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. 1960களில் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால், ஆரல் கடலுக்கு வந்தடையும் ஆறுகள் திசை திருப்பப்பட்டது. நீல நிற மீன்களால் நிரம்பி இருந்த அந்த கடல், அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, தற்போது முற்றிலுமாக மறைந்து விட்டது.

Advertisement

பருவநிலை மாற்றங்களின் காரணமாக, உலகின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. ஜனவரி 2024இல், உலக வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருந்தது. இது உலக சராசரி வெப்பநிலையை முதன்முறையாக 1.5 டிகிரி வரம்பிற்கு மேல் கொண்டு சென்றது. கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே, ஆரல் கடல் காணப்பட்டது. 2010இல் இது முழுவதுமாக வறண்டுவிட்டது.

ஆரல் கடல் உலகின் நான்காவது பெரிய நீர் நிலையாகும். 1960களில் சோவியத் நீர்ப்பாசன திட்டங்களுக்காக, இரண்டு பெரிய ஆறுகள் - வடக்கில் சிர் தர்யா மற்றும் தெற்கில் அமு தர்யா, பாலைவனத்தில் பருத்தி மற்றும் பிற பயிர்களை விளைவிற்பதற்காக திசைத் திருப்பப்பட்டன. திசை திருப்பப்பட்ட அந்த ஆறுகள், சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன.

சோவியத் நீர் பாசன திட்டங்கள் அமலுக்கு வரும் முன், ஆரல் கடல் வடக்கிலிருந்து தெற்கே கிட்டத்தட்ட 270 மைல்கள் (435 கிமீ) மற்றும் கிழக்கிலிருந்து மேற்காக 180 மைல்கள் (290 கிமீ) வரை நீண்டிருந்தது. ஆறுகளை திசை திருப்பியதில் நீர் வரத்து குறைந்ததால், ஆரல் கடலில் உள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் தொடங்கியது. பின்னர் அதில் உள்ள நீர் முழுவதுமாக ஆவியாகி மறைந்தது.

கஜகஸ்தான் இழந்த நீர் நிலையை மீட்கும் பொருட்டு, ஆரல் கடலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையே அணை ஒன்றைக் கட்டியது. ஆனால் முழுவதுமாக வறண்டு போன அந்த கடலை மீட்பது என்பது சாத்தியமற்றது என்கிறார்கள் வல்லுநர்கள்.

Tags :
Advertisement