For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Arabbie | அண்ணாமலை நடித்த படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!! ஒரே நாள் ஷூட்டிங்கில் இத்தனையும் செய்தாரா..?

06:01 PM Mar 15, 2024 IST | 1newsnationuser6
arabbie   அண்ணாமலை நடித்த படத்தின் ட்ரெய்லர் வெளியீடு     ஒரே நாள் ஷூட்டிங்கில் இத்தனையும் செய்தாரா
Advertisement

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள ‘அரபி’ என்ற கன்னட படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்தும் அண்ணாமலையின் நடிப்பு குறித்தும் அந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜ்குமார் பகிர்ந்துள்ளார்.

Advertisement

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களும் அரசியலில் இருந்து சினிமாவுக்கு சென்றவர்களும் நிறையப் பேர் உண்டு. அந்த வரிசையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இணைந்துள்ளார். இவர் ‘அரபி’ என்ற கன்னடப் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அண்ணாமலையின் நடிப்பு குறித்து பேசி இருக்கும் இயக்குநர் ராஜ்குமார், “சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உடல் குறைபாடு என்பது தடை கிடையாது. இரு கைகளை இழந்து நீச்சலில் சாதித்த விஸ்வாஸின் கதை எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அவர் என்னுடன் பயணித்த பின்பே நடிக்க ஒப்புக் கொண்டார். அவருக்கு ஊக்கம் கொடுக்கும் பயிற்சியாளராக அண்ணாமலை இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

நான் அண்ணாமலையை அணுகிய சமயத்தில்தான் அவர் வேலையை ராஜினாமா செய்திருந்தார். அவருக்கும் விஸ்வாஸை சந்தித்ததும் உடனே பிடித்துவிட்டது. ஆனால், ஒரு வருடம் கழித்து ஒரே ஒரு நாள் தான் அண்ணாமலையின் கால் ஷீட் கிடைத்தது. அண்ணாமலை அரசியலில் பிஸியானவர் என்பதால், ஒரே நாளில் ஒரு பாடல், 5 காட்சிகளை அவரை வைத்து எடுத்தோம். அண்ணாமலைக்கு பயங்கரமான நினைவாற்றல் உள்ளது. இரண்டு பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசி முடித்தார்” என அண்ணாமலையைப் புகழ்ந்து தள்ளியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார்.

Read More : Crime | கணவர் இறந்த பின் கொழுந்தனுடன் உறவு..!! அவருக்கு தெரியாமல் பலருடன் உறவு..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Advertisement