For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களிடம் அதிகம் பேசாத ஏ.ஆர். ரஹ்மான் தனது முன்னாள் மனைவி சாய்ராவுக்கு எப்படி Propose பண்ணாரு தெரியுமா?

AR doesn't talk much to women. Do you know how Rahman proposed to his ex-wife Saira?
02:19 PM Nov 20, 2024 IST | Kathir
பெண்களிடம் அதிகம் பேசாத ஏ ஆர்  ரஹ்மான் தனது முன்னாள் மனைவி சாய்ராவுக்கு எப்படி propose பண்ணாரு தெரியுமா
Advertisement

இந்திய இசையின் அடையாளமாக உலகம் முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளர் என்றால் அது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான். அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இந்தியா மட்டுமே உலகமே வியந்து பார்க்கும் லெஜண்ட்களில் ரஹ்மானும் ஒருவர். ஆஸ்கர், கோல்டன் குளோப், கிராமி என பல சர்வதேச விருதுகள் மட்டுமின்றி, தேசிய விருது, மாநில விருது, ஃபிலிம்ஃபேர் விருது, பத்ம பூஷன் என பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். எத்தனையோ இசையமைப்பாளர் வந்தாலும் ஏ.ஆர் ரஹ்மானின் எவர்க்ரீன் பாடல்கள் தான் இன்னும் பலரின் ப்ளேலிஸ்டுகளை ஆக்கிரமித்து வருகின்றன. அந்தளவுக்கு தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Advertisement

ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹ்மான் என்ற மகள்களும் அமீன் என்ற மகளும் இருக்கிறார். 29 ஆண்டுகள் ரஹ்மானும் சாய்ராவும் தங்கள் திருமண வாழ்க்கையை அமைதியாக நடத்தி வந்தனர். இந்த சூழலில் ரஹ்மானை விவாகரத்து செய்யப்போவது நேற்று அவரின் மனைவி சாய்ரா அறிவித்துள்ள திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ரஹ்மான் - சாய்ராவின் 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

ஏ.ஆர் ரஹ்மானும் தனது மனைவியை பிரிவது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். 30வது ஆண்டு திருமண வாழ்க்கையை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம்.. ஆனால் எதிர்பாராத முடிவு கிடைத்திருக்கிறது. உடைந்து போன இதயங்களின் வலியை கண்டால் கடவுளின் சிம்மாசனம் நடுக்கம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சூழலில் ஏ.ஆர் ரஹ்மானின் திருமண வாழ்க்கை பற்றிய பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராவுக்கு எப்படி புரபோஸ் செய்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் ஒருமுறை மனம் திறந்து பேசியிருந்தார். அப்போது தங்களின் முதல் சந்திப்பு, திருமணம் ஆகியவை குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார். அந்த பேட்டியில் பேசிய அவர் தனக்கு 27 வயதாக இருக்கும் போது திருமணம் செய்து கொள்ள இது சரியான நேரம் உணர்ந்ததாக கூறினார். தான் எப்போதும் கூச்ச சுபாவமுள்ளவர் என்றும் பெண்களிடம் அதிகம் பேசமாட்டார் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

தனது ஸ்டுடியோவில் பல இளம் பெண் பாடகர்களுடன் பணிபுரிந்தபோது, ​​​​அவர்களை மதித்ததாகவும், ஆனால் அவர்களை ஒருபோதும் வாழ்க்கைத் துணையாக நினைத்து பார்க்கவில்லை என்றும் ரஹ்மான் கூறியிருந்தார். தனது வேலையில் கவனம் செலுத்தியதால், உறவுகளைப் பற்றி சிந்திக்க தனக்கு நேரம் இல்லை எனவும் பேசியிருந்தார்.

தனது தாயும், சகோதரியும் தான் சென்னையில் உள்ள சூஃபி துறவியான மோதி பாபாவின் சன்னதியில் சாயிராவை முதலில் பார்த்தனர் என்றும், தனது தாய்க்கு சாய்ராவையோ அல்லது அவரது குடும்பத்தையோ தெரியாது என்றாலும், அவரிடம்  சாதாரணமாக பேசியதாகவும் கூறினார். அந்த சந்திப்பு மிக இயல்பாக நடந்தது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரஹ்மான் “ ஆனால் நான் சாய்ராவை முதன்முதலில் சந்தித்தபோது விஷயங்கள் மாறியது. அவர் அழகாகவும் பொறுமையாகவும் இருந்தார். 6 ஜனவரி 1995 அன்று எனது 28-வது பிறந்தநாளில் நாங்கள் முதல் முறையாக சந்தித்தோம். அது ஒரு சிறிய சந்திப்பு. அதன் பிறகு நாங்கள் பெரும்பாலும் தொலைபேசியில் பேசினோம். அப்போது என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று ஆங்கிலத்தில் நான் கேட்டேன். ஆனால் அவர் அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை. அமைதியாக இருந்தார்.” என்று தெரிவித்தார்..

தனது திருமணம் குறித்து தொடர்ந்து பேசிய ரஹ்மான் “ நான் தென்னிந்திய பின்னணியில் இருந்து வந்தாலும், சாய்ரா குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் வட இந்திய பாரம்பரியங்களுடன் வளர்ந்தவர். மற்ற எல்லா குடும்பங்களையும்  போலவே, புதியவர்களுடன் இணைந்துகொள்வது எனது குடும்பத்திற்கும் சவாலாக இருந்தது. ஆனால் என் தாயார், குடும்பத்தின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார். இருப்பினும், 1995 இல் எங்கள் மூத்த மகள் கதீஜா பிறந்த பிறகு, எல்லாம் சீரானது.” என்று தெரிவித்திருந்தார்.

Read More: இந்த மன்னர் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கன்னிப்பெண்ணை திருமணம் செய்து கொள்வாராம்! மொத்தம் இத்தனை மனைவிகளா?

ஊழியர்கள் டேட்டிங் செல்ல வெகுமதி வழங்கும் சீன நிறுவனம்..!! இது புதுசா இருக்குண்ணே..

Tags :
Advertisement