For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2024-25 கல்வி ஆண்டில் மியூசிக் அகாடமியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு...!

06:30 AM Jun 05, 2024 IST | Vignesh
2024 25 கல்வி ஆண்டில் மியூசிக் அகாடமியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
Advertisement

வரும் 2024-25 கல்வி ஆண்டில் மியூசிக் அகாடமியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது; சென்னை மியூசிக் அகாடமியின் அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆஃப் கர்னாடிக் மியூசிக் பள்ளியில் கர்னாடக இசை வாய்ப்பாட்டில் அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. 3 ஆண்டு காலம்கொண்ட இந்த உயர் டிப்ளமோபடிப்பு, ஆண்டுக்கு 2 செமஸ்டர் களை (ஜூலை - நவம்பர் மற்றும் ஜனவரி - ஏப்ரல்) கொண்டது.

Advertisement

இந்த நிலையில், வரும் 2024-25கல்வி ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வர்ணம், கீர்த்தனை பாடத் தெரிந்திருக்க வேண்டும். அதோடு, மனோதர்ம சங்கீத அறிவும் அவசியம். இதில் சேர விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை மியூசிக் அகாடமியின் இணையதளத்தில் (www.musicacademymadras.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், சுய விவரத்தையும் music@musicacademymadras.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்கும். வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இசை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement