முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Admission: அரசு ஐடிஐ-யில் சேர இன்று முதல் ஜூன் 7-ம் தேதி வரை விண்ணப்பம்..‌‌.!

06:01 AM May 10, 2024 IST | Vignesh
Advertisement

அரசு ஐடிஐ-யில் சேர 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இது குறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு ஐடிஐ-யில் சேர 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி இன்று முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் 136 உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால்94990-55689 என்ற செல்போன் எண் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article