குழந்தைகளுக்கு பவுடர் போடலாமா? மருத்துவர் அளித்த அதிர்ச்சி தகவல்..
பொதுவாகவே, நமது வழக்கப்படி, ஒரு குழந்தையை குளிப்பாட்டிய உடன் முதலில் செய்வது பவுடர் போடுவது தான். ஒரு டப்பா பவுடர் ஒரே நாளில் காலியாகும் அளவிற்கு பவுடர் போடுவது வழக்கம். இப்படி பவுடர் போடுவது சரியா என்று நீங்கள் யோசித்தது உண்டா? குழந்தைகளுக்கு பவுடர் போடலாமா என்பதை பற்றி மருத்துவர் அளித்த விளக்கத்தை பற்றி பார்க்கலாம்.
பிறந்த குழந்தைக்கு டால்கம் பவுடர் கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. டால்க் என்பது ஒருவகையான டஸ்ட் (Dust). பிறந்த குழந்தையின் சருமம் மட்டுமல்ல, நுரையீரலும் முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்காது. எனவே, டால்கம் பவுடர் போடும் போது அதைக் குழந்தைகள் சுவாசிப்பதால், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.
குளிப்பாட்டியதும் எங்களால் குழந்தைக்கு பவுடர் போடாமல் இருக்கவே முடியாது என்று கூறும் தாய்மார்கள் மற்றும் பாட்டிகள் இருப்பது உண்டு. அப்படி கட்டாயம் பவுடர் போட்டே தீருவேன் என்பவர்கள், கார்ன் ஸ்டார்ச் உபயோகிக்கலாம். அதாவது, சோள மாவிலிருந்து தயாரிக்கப்படும் பவுடரை குழந்தைக்கு உபயோகிக்கலாம். அதே போல ஆரோ ரூட் எனப்படும் கிழங்கிலிருந்து எடுக்கப்படும் பவுடர் கிடைக்கிறது அதையும் நாம் வாங்கி பயன்படுத்தலாம்.
Read more: “விபச்சாரம் செய்தால் தான் அதிக பணம் கிடைக்கும்”; கணவரின் பேச்சை கேட்டு பெற்ற தாய் செய்த காரியம்.