முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'ரஜினி நலமுடன் உள்ளார்' இன்னும் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ்..!! - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

Apollo Hospital has issued a statement that actor Rajinikanth's health condition is stable and he will return home in 2 days
07:35 PM Oct 01, 2024 IST | Mari Thangam
Advertisement

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே த.செ.ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதயத்தில் இருந்து பிரியும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் இருந்ததாகவும் அதை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்துவிட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

மேலும், நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பான மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ செய்திக் குறிப்பில், “ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மூத்த இதயவியல் மருத்துவர் சாய் சதீஷ், ரஜினியின் இதயத்தில் ஸ்டன்ட் பொறுத்தியுள்ளார். திட்டமிட்ட படி அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை ரஜினி ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினி நலமுடன் உள்ளார். இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; 8 வகுப்பு முடித்திருந்தால் போதும்..! தமிழக அரசில் வேலை.. தூத்துக்குடியிலே பணி..! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Tags :
actor rajinikanthApollo Hospitalhealth condition
Advertisement
Next Article