For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Apartments | அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளம் யாருக்கு சொந்தமானது..? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

12:01 PM Mar 15, 2024 IST | 1newsnationuser6
apartments   அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளம் யாருக்கு சொந்தமானது    சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Advertisement

அடுக்குமாடி கட்டுமான விதிகளின் படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் உள்ளது என்பதை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த அஸ்வின் வர்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெசன்ட் நகரில் "ரமணியம் ஸ்வர்ணமுகி" என்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டுமான நிறுவனம் போதுமான தரைதள வசதி இல்லாமல் விதிகளை மீறி கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் போலீசிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐகோர்ட் உத்தரவுக்கு பின்னரும், கட்டுமான நிறுவனத்துக்கு ஆதாரவாக பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கட்டமான நிறுவனம் சார்பில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை, பெருநகர வளர்ச்சி குழும விதிகளின் படி கட்டுமானங்கள் முடிந்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், தரைதள கட்டுமான விதிப்படி, கட்டிட உரிமையாளர்களுக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், விதிகளின் படி தரைதள உரிமை அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத கட்டுமானங்கள் இருந்தால் அவற்றை அகற்றி அனைத்து கட்டிட உரிமையாளர்களின் பொது பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுக்குமாடி வாங்குவோர் சில விஷயங்களை கவமனாக இருக்க வேண்டும். அடுக்குமாடி வீடு கட்டும் நிறுவனங்கள் குடிநீர், கழிவு நீர் வடிகால், மின்சாரம் போன்ற வசதிகளை கட்டுமான நிறுவனம் முறையாக செய்து தர வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில், 50 வீடுகளுக்கு மேல் கட்டப்படும் நிலையில் தனியாக மின்சார டிரான்ஸ்பார்மர் கண்டிப்பாக அமைக்க வேண்டும். இணைதள சேவை வழங்கும் நிறுவனங்கள் குடியிருப்பு வளாகங்களில், தனியாக சர்வர் அமைப்பது அவசியம் ஆகும்.

இணையதளம், கேபிள் டிவி போன்ற சேவைகளுக்கு தேவையான சர்வர் அமைப்பதற்கான இடம், மின்சார இணைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இத்துடன் சிசிடிவி கண்காணிப்புக்கான இடத்தையும் அவர்கள் ஏற்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : திடீர் ட்விஸ்ட்..!! BJP கூட்டணியில் போட்டியிட மறுக்கும் ஓபிஎஸ்..!! நிபந்தனையற்ற ஆதரவு மட்டுமே..!!

Advertisement