தமிழகமே...! 3,000 சதுர மீட்டர் தவிர.. இதற்கும் 10% ஓ.எஸ்.ஆர் கட்டணங்கள் வசூலிக்க உத்தரவு...!
சாலைகள் மற்றும் முதல் 3000 சதுர மீட்டர் தவிர தளத்தின் உண்மையான பரப்பளவில் 10% ஓ.எஸ்.ஆர் (OSR) கட்டணங்கள் வசூலிக்க நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன் அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில், உள்ளாட்சியிடம் ஓ.எஸ்.ஆர் நிலம் ஒப்படைக்கப்படாத நிலையில், மனையின் உரிமையாளருக்கு முழு இழப்பீடு வழங்கலாம். வரன்முறை செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், உள்ளாட்சியிடம் ஒப்படைக்கப்படாமல் இருக்கும் சாலை, ஓ.எஸ்.ஆருக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை இழப்பீடு இன்றி கையகப்படுத்தலாம். வரன்முறை செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், ஓ.எஸ்.ஆர் ஆக ஒதுக்கப்பட்டு, தனியார் பெயரில் மனையாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை, இழப்பீடு இன்றி கையகப்படுத்தலாம்.
மேலும் அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்டதை விட, 33.33 சதவீதம் குறைவாக இழப்பீடு வழங்கலாம். அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில் ஓ.எஸ்.ஆர் ஆக ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சியிடம் ஒப்படைக்காமல் மனையாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை இழப்பீடு இன்றி கையகப்படுத்தலாம். மனை மேம்பாட்டாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளில், பள்ளிகள், மருத்துவமனை, சமுதாயக்கூடம் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு. உரிய இழப்பீடு வழங்கலாம் என்று ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சாலைகள் மற்றும் முதல் 3000 சதுர மீட்டர் தவிர தளத்தின் உண்மையான பரப்பளவில் 10% ஓஎஸ்ஆர் (OSR) கட்டணங்கள் வசூலிக்க நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன் அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.