இந்தியாவின் ஆன்டிபயாடிக் மருந்துக்கு தடை..!! கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் நடவடிக்கை..!!
கடும் பக்க விளைவுகள் இருப்பதாகக் கூறி, ஆன்டிபயாடிக் ஊசி மூலம் செலுத்தப்படும் பயோடக்ஸ் மருந்து விற்பனை மற்றும் விநியோகத்திற்கு நேபாள நாட்டின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸைடஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த பயோடக்ஸ் மருந்து, குறிப்பிட்ட தயாரிப்பு முறைகளைப் பின்பற்றவில்லை என்பது, நேபாளத்தின் மருந்து ஒழுங்குமுறை ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நாங்கள் மருந்து தயாரிப்பு நிறுவனம், இறக்குமதியாளர்கள், விநியோகிப்பாளர்கள் என அனைவருக்கும் மருந்து விற்பனை, இறக்குமதி மற்றும் விநியோகத்தை அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருப்பதாக மருத்துக் கட்டுப்பாட்டுத் துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
Read More : கிரெடிட் கார்டால் இந்த பிரச்சனையை சந்திக்கிறீங்களா..? அப்படினா இதை ஃபாலோ பண்ணுங்க..!! சூப்பர் டிப்ஸ்