கஞ்சா விற்பதில் முன்விரோதம்..!! இளைஞரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிய கும்பல்..!! அப்ப கூட வெறி அடங்கல..!!
சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் என்ற இளைஞர் மீது கஞ்சா விற்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர், நேற்றிரவு தனது நண்பர்களுடன் அமர்ந்து பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, 5 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் தமிழை தனியாக அழைத்துச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதையடுத்து, வெறி அடங்காத மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், வழியில் நடந்து சென்று கொண்டிருந்த சூர்யா என்ற வட மாநில இளைஞரையும் ஆத்திரத்தில் வெட்டியுள்ளனர். பின்னர், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார்களை தங்களது கத்தியால் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, படுகாயம் அடைந்த தமிழை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சையில் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சபரி என்பவருக்கும், தமிழுக்கும் கஞ்சா விற்பதில் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், தமிழை, சபரி தனது நண்பர்களுடன் வந்து வெட்டிச் சென்றது தெரியவந்தது. மேலும், போரூர் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாகவும், இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் உளவு பிரிவு போலீசார் அதனை கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களுடன் கூட்டணி வைத்து உளவு பிரிவு போலீசார் செயல்பட்டு வருவது இந்த கோஷ்டி மோதலுக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.