மீண்டும் ஒரு புயல்..!! புரட்டி எடுக்கப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
அந்தமான் கடல் பகுதியில் வரும் 26ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வரும் 26ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 27ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்று வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் கரையை கடந்தது. தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி வரும் 26ஆம் தேதி உருவாக உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் திண்டுக்கல், கோவை, தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.