For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தஞ்சையை தொடர்ந்து மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!! காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல்..!!

A young woman working at a Xerox shop in the Othakadai area was brutally attacked by a young man named Siddhik Raja.
01:25 PM Nov 21, 2024 IST | Chella
தஞ்சையை தொடர்ந்து மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்     காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல்
Advertisement

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பணியாற்றி வரும் இளம்பெண்ணை இளைஞர் சித்திக் ராஜா என்பவர் கொடூரமாக தாக்கியுள்ளார். காதலிக்க வற்புறுத்தி அந்த இளம்பெண் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கிறார். இந்த கொடூர சம்பவம் நவ.17ஆம் தேதி நடந்துள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இளம்பெண், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

மேலும், இந்த கொலை வெறித் தாக்குதல் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞர் ஜெராக்ஸ் கடைக்கு வந்து, அந்த இளம்பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் கோபமடைந்த இளைஞர், திடீரென அந்த பெண்ணை தாக்குகிறார்.

இதற்கிடையே, நேற்று தஞ்சை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பள்ளியின் உள்ளேயே கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

Read More : மாதந்தோறும் ரூ.12,000-க்கு மேல் வருமானம் பெற வேண்டுமா..? அப்படினா இந்த திட்டம் பற்றி தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement