முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி..!! போலி NCC பயிற்சி.. மற்றொரு பள்ளியில் சிறுமி பாலியல் வன்கொடுமை..!! சிக்கிய சிவராமன் 

Another school girl has filed a sexual complaint against the NTK administrator who was arrested in the Krishnagiri school girl rape case.
03:56 PM Aug 22, 2024 IST | Mari Thangam
Advertisement

கிருஷ்ணகிரியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நாதக நிர்வாகி மீது மற்றொரு பள்ளி மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. அதில், 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மாணவி வன்கொடுமை விவகாரத்தை தாமாக முன்வந்து மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில், 8ஆம் வகுப்பு மாணவி பயிற்சியாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும், அதற்கு பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், சக பயிற்சியாளர்கள் உடந்தையாக இருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், காவல்துறை தலைவர் (டிஜிபி) பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றை அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டார்.

இந்நிலையில், சிவராமன் மீது மற்றொரு மாணவி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். தனியார் பள்ளியில் போலியான என்சிசி முகாம் நடத்தப்பட்டதாகவும், அப்போது அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும், சிவராமனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

Read more; மக்களே.. இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Tags :
Fake NCC campkrishnagirirape case
Advertisement
Next Article