வேறு மதம்..!! காதலனை ஆசையோடு அழைத்து மது விருந்து வைத்த காதலியின் சகோதரர்..!! துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் போட்ட கொடூரம்..!!
மும்பையில் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். மும்பை கோராய் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில், வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது கையில் எழுதப்பட்டு இருந்த டாட்டூவின் அடையாளத்தை வைத்து இந்த வழக்கில் போலீசார் துப்புத்துலக்கினர்.
கொலை செய்யப்பட்ட வாலிபர் பெயர் பஸ்வான் (21). பஸ்வான் தந்தையிடம் விசாரித்தபோது பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, பஸ்வானை கொலை செய்ததாக மும்பை பயந்தர் பகுதியைச் சேர்ந்த மொகமத் சத்தார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம் தர்பகங்காவைச் சேர்ந்த பஸ்வான் தற்காலிகமாக புனேயில் வசித்து வந்தார். போலீஸாரின் தீவிர விசாரணையில், பஸ்வான் தனது கிராமத்தில், வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஸ்வான் தர்பகங்காவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றியபோது அங்கு வந்த பெண்ணை முதன் முதலில் சந்தித்துள்ளார். பிறகு அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். இது குறித்து இரு குடும்பத்திற்கும் தெரியவந்ததால், ஊர் பஞ்சாயத்து கூடி இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டனர். பஸ்வானை அவரது தந்தை புனேவுக்கு அனுப்பி விட்டார்.
அந்த பெண்ணையும் மும்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மும்பை வந்த பிறகும் அப்பெண் தனது சகோதரன் போனை பயன்படுத்தி அடிக்கடி பஸ்வானுடன் பேசியிருக்கிறார். இது அப்பெண்ணின் சகோதரனுக்கு தெரியாது. பஸ்வான் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் மும்பை வந்துள்ளார். தனது காதலி தனக்கு போன் செய்த நம்பருக்கு போன் செய்தபோது அப்பெண்ணின் சகோதரர் எடுத்து பேசினார். உடனே பஸ்வானை பயந்தரில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார்.
பஸ்வான் அங்கு சென்றபோது அவருக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க செய்துள்ளார் பெண்ணின் சகோதரர் மொகமத். அளவுக்கு அதிகமாக மது குடித்த பஸ்வானை கழுத்தை அறுத்த மொகமத், உடலை பல துண்டுகளாக வெட்டி காலி பெயிண்ட் டப்பாவில் அடைத்து அதனை சாக்குமூட்டையில் கட்டி ஆட்டோவில் எடுத்துச்சென்று கோராய் பகுதியில் போட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.